முச்சந்தி

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் திருத்தந்தையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை 76 வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அம்மறைமாவட்டத்திற்கு மன்னார் மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் புதிய ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தையின் இந்நியமன செய்தி மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கென  ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் உத்தியோகபூர்வமாக வாசிக்கப்பட்டது.

இதன்போது மன்னார் மறைவாட்டத்திலுள்ள ஆலயங்களின் மணிகள் ஒலிக்கப்பட்டு  இறைமக்களுக்கும் இச்செய்தி அறிவிக்கப்பட்டது.

புதிய ஆயராக நியமனம்பெற்ற அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகை மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பதுடன் தனது குருத்துவ உருவாக்கத்தை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலும் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் முழுமையாக பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button