முச்சந்தி

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் இரங்கல் செய்தி!

அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான திரு.முல்லை மோகன் அவர்கள் 12.12.24 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்த போது நம்ப முடியாத நிலையில் அதிர்ச்சியும் கவலையுமடைந்தோம்.

திரு.முல்லை மோகன் அவர்கள் தாயகத்திலேயே அறிவிப்பாளராகவும்,யாழ் மணிக்குரல் சேவையிலும் பங்காற்றி தனது அறிவிப்புத்துறை ஆளுமையை நிலைநிறுத்தியவர்.

ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த அவர் தொடர்ந்தும் அவர் காலமாகும் வரை தனது வாழ்நாளை அறிவிப்புத்துறையோடு இணைந்து பயணித்தவர். ஊடகவியலின் உளவியலையும் கண்டறிந்தவர்.

இவர் யாழ் பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவராவர்.இவர் ஜேர்மனியில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட விழாக்களில் அறிவிப்பாளராகவும் பேச்சாளராகவும் பங்காற்றி நேர்த்தியான அறிவிப்பாளர் எனப் பாராட்டுப் பெற்றவர்.

திரு.செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழ் தொலைக்காட்சி,திரு.எஸ்.எஸ்.குகநாதன் அவர்களால் நடத்தப்பட்ட ரிஆர்ரி வானொலி தொலைக்காட்சி,தி.த.இரவீந்திரன் அவர்களின் ஐரோப்பியத் தமிழ் வானொலி,திரு.சிவநேசன் அவர்களின் தமிழ்த் தொலைக்காட்சி,ஜிரிவி தொலைக்காட்சி ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியவர்.

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் பன்முக விழாக்களில் அறிவிப்பாளராகவும்,பேச்சாளராகவும் பங்காற்றியவர்.அறிவிப்புத்துறைக்கு வந்த காலந் தொட்டு முழுமையாக தான் எடுத்துக் கொண்ட கலை,இலக்கியப் பணியில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரின் சேவை மீண்டும் மீண்டும் தானாகவே நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வேளை அவரை இழந்து துயருற்று நிற்கும் அவரின் பிள்ளைகளுக்கும்,அவருடைய ஊடக அறிவிப்புத்துறை நண்பர்களுக்கு அறுதல் கூறி அவர்களின் துயரில் பான்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியமாகிய நாமும் பங்குகொண்டு இரங்கலைத் தெமரிவிக்கிறோம்.

ஏலையா க.முருகதாசன்

செயலாளர்

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *