தமிழ் மக்கள் பேரவையின் யோசனை; தமிழ் தேசியக் கட்சிகள் விரைவில் கூடிப் பேசும்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்,வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கிளிநொச்சியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்புதொடர்பில் தெரிவிக்கையில்,
விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் அதனை பாராளுமன்றத்தில் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றோம் என்ற விடயம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளோம்.
நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று செல்வம் அடைக்கலநாதனிடம், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு இருந்தோம்.அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பின்னர் ,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு இணங்கியுள்ளோம்.
அந்த வகையில் சிறிதரன் எம்.பி.யோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்திருக்கின்றோம்.
அந்த சந்திப்பில் பேரவையினுடைய தீர்வுத் திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகத் தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை அடுத்து வரும் ஒரு சில நாட்களில் சிறிதரன் எம்.பி யோடும் பேசி முடிவெடுப்போம் என்றார்.
![]()