7 கட்சிகள் பெற்ற ஆசனம் 1; 1கட்சி பெற்ற ஆசனங்கள் 8; வாக்குப் பலம்தான் முக்கியம் என்கின்றார் சிறிநேசன்
தமிழரசு கட்சி ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டு 8 ஆசனங்களை பெற்றுள்ளது எனவே 7 கட்சியுடன் 8 ஆவது கட்சியாக தமிழரசுக் கட்சி இணைந்து கொள்ளவேண்டும் என்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்தை ஏற்கமுடியாது 7 கட்சிகளாக செயற்பட்டிருந்து கூட ஒரு ஆசனத்தை மட்டுமே அவர்கள் கைப்பற்றியுள்ளனர் எனவே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமானது அல்ல கட்சிகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வாக்குபலம்தான் முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழரசுக் கட்சி ஒற்றுமையை விரும்புகின்ற கட்சி. கடந்த காலத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் பிரிந்து செயற்படுகின்றோம் என்ற விடயத்தை சொல்லியிருந்தோம்.மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்ததில் இணைந்து செயற்படுவோம் என்ற கருத்தை தெரிவித்திருந்தோம்.ஆனால் அதற்குள் அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி நாங்கள் 7 கட்சிகள் ஒன்றாகிவிட்டோம் நீங்கள் ஒரு கட்சியாக இருப்பதால் நீங்கள் எங்களுடன் வந்து இணையுங்கள் என நிபந்தனைகளை விதித்தனர்.
இதன்போது நாங்கள் அப்படி அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படலாம் எனக் கருத்து சொன்னபோதும் அவர்கள் இல்லை நாங்கள் 7 கட்சிகள் இருக்கின்றோம். எனவே 7 கட்சிகளுடன் ஒரு கட்சிதான் வந்து இணையவேண்டும் என கருத்தை முன்வைத்திருந்தனர்.
உண்மையில் தேர்தல் முடிந்த பின்னர் விளங்குகின்ற விளக்கம் என்னவென்றால் 7 கட்சிகளாக செயற்பட்டிருந்தால் கூட அவர்களால் ஒரு ஆசனத்தையே கைப்பற்ற முடிந்திருக்கின்றது ஆனால் ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டிருந்த தமிழரசு கட்சி 8 ஆசனங்களை பெற்றுள்ளது ஆகவே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமானது அல்ல கட்சிகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வாக்குப் பலம்தான் முக்கியமானது அந்தடிப்படையில் அவர்கள் இந்த விடயத்தை தெளிவாக உணர்ந்திருப்பார்கள்.
வரும் காலங்களில் எமது கட்சி கூடி தெளிவான ஒரு முடிவெடுக்கும் அந்த முடிவை அறிவிப்பேன் அதேவேளை நிபந்தனைகள் விதிப்பது 7 கட்சியுடன் 8 ஆவது கட்சியாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளமுடியாது வாக்கு பலத்தின் அடிப்படையில் எந்த கட்சியோடு எந்த கட்சி இணையவேண்டும் என சிந்திக்கவேண்டும் என்றார்.
![]()