949 வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை?

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 949 வேட்பாளர்கள் இதுவரை பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய கால எல்லைக்குள் தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 7412 பேர் மட்டுமே தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்கியதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 690 கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களில் 493 மட்டுமே அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தேசியப்பட்டியலுக்காக பெயர் குறிப்பிடப்பட்ட 527 பேரில் 434 பேரும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *