தேசியத்தை முன்னிலைப்படுத்துவோரை இனவாதிகள் என்று சித்திரிக்கக் கூடாது
தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுபவர்களை இனவாதிகள் என்று சித்திரிக்கக் கூடாது. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டதால் தான் அமெரிக்கர்கள் டொனால்ட் ட்ரம்பை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள் என சர்வஜன சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.யான திலித் ஜயவீர தெரிவித்தார்.
அரசின் கணக்கு வாக்குப்பதிவு மீதான மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தது. பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடன், பல பொய்களையும் குறிப்பிட்டுள்ளது வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.
இனவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.. இனவாதத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்படுகிறோம். தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுபவர்களை இனவாதிகள் என்று சித்திரிக்கக் கூடாது. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டதால் தான் அமெரிக்கர்கள் டொனால்ட் ட்ரம்பை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள்.தேசியத்தை இனவாதம் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என்றார்.
![]()