முச்சந்தி

தெல்லிப்பழை சிவஸ்ரீ. விஸ்வநாத ஐயர் மறைவு இந்து உலகுக்கு பேரிழப்பு; சர்வதேச இந்துமத பீடம் அனுதாபம்

இந்திய பாரம்பரியத்தை கொண்டவரும் தெல்லிப் பழையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவருமான சிவஸ்ரீ.விஸ்வநாத ஐயரின் (நாராயண வாத்தியார்) மறைவு முழு இந்து உலகுக்கும் பேரிழப்பு என சர்வதேச இந்து மத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடுவதாவது,

இலங்கையில் நடைபெறுகிற பெரும்பாலான கும்பாபிஷேகங்களை தலைமையேற்று நடத்தியவர். அதேவேளை தெல்லிப்பழை வேதாகம பாடசாலையை நிறுவி தங்கம்மா அப்புக்குட்டியின் அனுசரணையின் கீழ் அந்தண மாணவர்களை உருவாக்கி, அந்தண சமூக மேம்பாட்டுக்கு பாடுபட்டவர் அரும் பணியாற்றியவர்.

வேத வாத்தியார், வைதீக வாத்தியார் மற்றும் இவரது சேவையை பாராட்டி இலங்கை அரசு இவருக்கு அகில இலங்கை சமாதான நீதவான் பட்டம் கொடுத்தது.

இவரது மறைவு பெரும் இழப்பு என பாபு சர்மா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதோடு குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்து, எல்லாம் வல்ல திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் மோட்ச லோக பிராப்த்திக்கு அருள வேண்டும். அனைத்து இந்து மக்களும் அந்தணர்களும் அவரது ஆத்ம சாந்திக்கு பிராத்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button