மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க சிபாரிசு செய்தது யார்? விரைவில் பெயர்கள்

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் நேற்று உறுதியளித்துள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களைப் போல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு அமைச்சரிடம் வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button