உள்ளாட்சி தேர்தல்; உயர்தரப் பரீட்சை முடிந்த பின்னர் அறிவிப்பு?
2024 க.கொ.த உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பிறகு, வரவிருக்கும் உள்ளாட்சி (LG) தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டால், பரீட்சைக் காலத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
இதனால், பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், பரீட்சை முடியும் வரை தேர்தல் குறித்த அறிவிப்பை தாமதப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தாமதமான பரீட்சைகள் இந்த வாரம் (டிசம்பர் 4ஆம் திகதி) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (3) நடைபெற உள்ளது.
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கூட்டம் பிற்பகல் கூடவுள்ளது.
இதன்போது, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் சமர்ப்பிப்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்கள் கட்சி மாறியமை, சிலர் நாட்டை விட்டு வெளியேறிமைய மற்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றமை போன்ற பிரச்சனைகளால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
![]()