சீனா -இலங்கை நட்பை பிரிக்க சில நாடுகள் முயற்சி

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரிக்க சில நாடுகள் முயற்சிக்கின்றன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் க்யூஷேன்ஹோங் தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த சீனத்தூதுவர், அஸ்கிரி மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன உள்ளிட்ட சில முக்கிய மகாநாயக்கர்களினது ஆசிகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்

இலங்கையை நட்பு நாடாக அபிவிருத்தி செய்ய சீனா விரும்புவது மட்டுமன்றி, அதற்கு ஆதரவை வழங்குவதற்கும் எப்போதும் உழைத்து வருகிறது. இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதியையும், புதிய அரசாங்கத்தையும் தெரிவு செய்துள்ளமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் , புதிய அரசாங்கத்திற்கு முன்னர் போன்று சீனாவின் ஆதரவு வழங்கப்படும் .அதில் சீனா உறுதியாகவுள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரிக்க சில நாடுகள் முயற்சிக்கின்றன இது குறித்து இரு நாடுகளும் கவனம் செலுத்துவது அவசியம்.இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவை யார் பிறக்க முயற்சித்தாலும் அது வெற்றியடையாது இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த பந்தம் ஒருபோதும் துண்டிக்கப்படாது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கும் பலம் சீனாவிடம் உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *