எதிர்கட்சி அரசியல் கட்சிகளின்; உயர்பதவிகளில் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் உயர்பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் தேர்தலில் முகங்கொடுப்பதற்காக கட்சிப் பொறிமுறையை பலப்படுத்த வேண்டியிருப்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கருத்துக்கள் எழுந்துள்ளன.

மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிலை மாற்றங்கள் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுக்களை நியமிக்க அந்தந்த கட்சி தலைவர்கள் உத்தேசித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *