முச்சந்தி

தென்மராட்சியில் பாதிக்கப்பட்டோருக்கு 400 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கல்!

தென்மராட்சியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில்- சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடு இந்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது நகர இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவை சமைத்து தனித்தனி பொதிகளாக்கி கிராம சேவகர்களின் பட்டியலூடாக இந்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதன்படி தென்மராட்சியில் வீடுகளை விட்டு வெளியேறி நுணாவில் சரஸ்வதி வித்யாலயாலயம் ,மதுவன் சனசமூக நிலையம், கொடிகாமம் நாவலடி கிராமம், கொடிகாமம் கொலனி சீயோன் தேவாலயம் , பாலாவி தெற்கு, அல்லாரை , சாவகச்சேரி ஆகிய நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *