பலதும் பத்தும்

கார்த்திகை 12 சபரிமலையில் தீப அலங்காரம்

கார்த்திகை 12ம் நாளை முன்னிட்டு சபரிமலையில் நேற்று தீப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது

கேரளாவில் கார்த்திகை 12-ம் தேதியை 12 விளக்கு என்று அழைக்கின்றனர். இந்த நாளுக்கு பின்னர்தான் கேரளாவை சேர்ந்த அதிகமான பக்தர்கள் சபரிமலை வர தொடங்குவர்.

இந்த நாளில் எல்லா கோயில்களிலும் தீப அலங்காரம் நடத்துவது வழக்கம். சபரிமலையிலும் நேற்று மாலை 6:30 மணிக்கு கொடி மரத்தின் இரண்டு பக்கத்திலும் உள்ள பெரிய அடுக்கு விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் சரண கோஷம் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோயில் மணி ஒலிக்க தீபாராதனை நடைபெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.