பலதும் பத்தும்
$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி!
உலகின் மிகவும் பிரபலமான மின்னியல் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி100,000 அமெரிக்க டொலர்களை நெருங்கியது.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 5 அன்று டொனால்ட் ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிட்கொயின் பெறுமதி உயர்வு கண்டுள்ளது.
அந்த வியாழக்கிழமை உலகின் முன்னணி மின்னியல் நாணயமான பிட்கொயின் 99,300 அமெரிக்க டொலர்களை எட்டியது.
ஆசிய வர்த்தக நேரங்களின்படி, பிட்கொயின் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4% அதிகரித்து $99,314.95 இல் வர்த்தகமானது.
அதன் சந்தை மூலதனமும் $1.97 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிட்கொயின் பெறுமதி 48% க்கு மேல் உயர்ந்துள்ளது.
மின்னியல் நாணயங்களுக்கான ட்ரம்பின் ஆதரவு, எலோன் மஸ்க் போன்ற உயர்மட்ட நபர்களின் ஆதரவுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.