இத்தாலி வாழ் முதியோர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
இத்தாலியில் வாழும் 100 வயதைக் கடந்த முதியோர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.
உலகில் அதிக முதியோர் வாழும் நாடுகளில் இத்தாலி இரண்டாம் இடம் வகிக்கிறது. இங்கு 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 100 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை அங்கு 30 சதவீதம் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இவ்வளவு எண்ணிக்கையில் 81 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு 110 வயது அல்லது அதைவிட அதிக வயதானோரின் எண்ணிக்கை 21. அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மற்ற 20 பேருமே பெண்கள்.
மூத்த குடிமக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இருப்பார்கள். பொதுவாக 100 வயதைக் கடந்தவர்கள் இப்போது குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலியில் இப்போது அவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருப்பதாக இத்தாலியின் அந்த அறிக்கை கூறுகிறது.