அழிந்துபோன உயிரினம் டைடனோபோவா; மீண்டும் கண்டறியப்பட்ட அதிசயம்
உலகில் இதுவரை வாழ்ந்த மிக பெரிய பாம்பு டைடனோபோவா. இது இப்போது அழிந்துபோன உயிரினங்களின் வகையறாவில் உள்ளடங்கிவிட்டது. பல கோடி வருடங்களுக்கு முன் டைனோஸர் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்த உயிரினமான இது, கொலம்பியா பகுதிகளில் தான் வாழ்ந்துள்ளது என அறியப்படுகின்றது. தட்பவெட்ப மாறுதல்களால் இந்த வகை பாம்புகள் அழிந்துபோனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆனால், இந்த பாம்பு பற்றிய ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1959ஆம் ஆண்டு ரெமி வேன் லியேர்டே என்னும் கொலேனல் காங்கோ பகுதியில் ஒரு பெரிய பாம்பை பார்த்து, அதை அவர் புகைப்படமும் எடுத்துள்ளார்.
அந்த பாம்பு 50 அடி நீளத்தில், கரும்பச்சை நிறத்தில் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார். இன்னும் அவர் பயணித்த விமானத்தை, கொஞ்சம் கீழே இறக்கி, அந்த பாம்பை தெளிவாக புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தபோது, அது தரையில் இருந்து எழுந்து அவர்களின் விமானத்தைத் தாக்க முயன்றுள்ளதாம். இதனால் பயந்து அவர்கள் அங்கிருந்து வந்துவிட்டார்களாம்.
இதுவரை உலகில் வாழ்ந்த பாம்புகளிலேயே பெரியது இது தான். அந்தவகையில், ஒரு அழிந்துபோன உயிரினமொன்று, மீண்டும் கண்டறியப்பட்டமை ஆய்வாளர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. இப்படி அழிந்துபோன உயிரினங்கள் பல, ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதாக கூறும் ஆய்வாளர்கள், இன்னமும் ஆபரிக்க காட்டு பகுதியிலும், கடலுக்கு அடியிலும் கண்டுபிடிக்காதது எவ்வளவோ உள்ளன என்கின்றனர்.