இந்தியா

நவம்பர் 20 ஆம் திகதி  தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பிலும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *