இலங்கை

வேட்பாளர் பட்டியலில் பெயர்; பெண் முறைப்பாடு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.

அப்பெண் மேலும் தெரிவிக்கையில் ,

“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”

அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.