இலங்கை
உலகின் மிகச்சிறிய அமைச்சரவை கடைசியாகக் கூடியது
மூன்று அமைச்சர்களை மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரும் கட்சியின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், அதற்கு முன்னர் இடம்பெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது.