கல்லறைகளுக்கு நடுவில் ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதை: கொங்க்ரீட் கொண்டு மூடிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் கடந்த மாதம் முதல் லெபனாலில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தரைவழி தாக்குதலை தொடங்கியது.

அதன்படி ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளை கண்டறிந்து இஸரேல் இராணுவம் அழித்து வருகிறது.

இவ்வாறிருக்க கல்லறை தோட்டத்துக்குள் பிரம்மாண்ட சுரங்கப்பாதை அமைத்துள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு.

அதனை கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவம் அழித்துள்ளது.

இந்த சுரங்கப் பாதைக்குள் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் அறைகளும் இருந்துள்ளதோடு ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இறந்தாலும் உயிரோடு இருந்தாலும் மனித உயிரை ஹிஸ்புல்லா மதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த கல்லறை சுரங்கப் பாதையை 4500 கனமீட்டர் கொங்க்ரீட் கொண்டு இஸ்ரேல் மூடியுள்ளது.

ஆனால், காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் இதுபோன்ற சுரங்கங்களை அமைத்ததில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *