அமெரிக்காவில் விமான விபத்து; ஐவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரழிந்துள்ளனளர்.

இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *