பலகாரங்களால் வடிவமைக்கப்பட்ட ரங்கோலி கோலம்

தீபாவளியை முன்னிட்டு இந்தியப் பலகாரங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய ரங்கோலி வடிவக் கோலம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட இக் கோலம் முறுக்கு, கேக், லட்டு, ஜாங்கிரி, பாதுஷா போன்ற பலகாரங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

100 இற்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் ரங்கோலி கோல வடிவமைப்பில் கலந்துகொண்டனர்.

அலையன்ஸ் ஒஃப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் அவுட்ரீச், இட்ஸ் ரெய்னிங் ரெயின்கோட்ஸ், வேலையிடப் பாதுகாப்பு மன்றம், ஹெல்த்செர்வ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *