உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ)
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார்.
அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார்.
26 மணி நேரம் நீடித்த இந்த கின்னஸ் சாதனை முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.