கவிதைகள்

நெஞ்சில் சுட்டுவிடுங்கள்… கவிதை… முல்லைஅமுதன்

தீர்மானித்தபடியே
கம்பத்தில் கட்டியிருந்தார்கள்.
தலையில் சுடுவதாகப் பேசிகொண்டார்கள்.

ஒருவன் குறிபார்த்துத் தயாரானான்.
நெஞ்சில் சுட்டுவிடுங்கள் என்றேன்.
வந்தவர்களில் ஒருவன் முறைத்தான்.
குறைந்தபட்சம் எதையும் எழுதி
கழுத்தில் தொங்கவிட்டுவிடாதீர்கள்.

பழிச்சொல் வந்துவிடக்கூடாது.
காதில் யாரும் வாங்கிக்கொள்ளவில்லை.
திடுதிப்பென்று கூட்டத்திலிருந்து வந்த
ஒருவன் நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு
மறைந்தான்.

எனக்கு நினைவிருக்கிறது…
திருடியவன்…
பெண்ணைத் தொட்டவன்..
எல்லாம்..எல்லாம்..
அவன் மறைந்துவிட்டான்..

குருதி வழிந்து வரலாற்றில் படிந்தது…

முல்லைஅமுதன்
05/10/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *