கவிதைகள்
“மிஸ் யூ” … கவிதை… பாத்திமா மிஸ்னா
எப்போதுமே சந்தித்துக்
கொள்ளாமலே தொடர்ந்த காதலில்
திடீரென சந்திக்க
கிடைத்தால் என்னவாகும்?
நீ நான் என்பதையெல்லாம்
தகர்த்தெறிந்து விட்டு
இறுக அணைத்துக் கொண்டு
நெற்றி படரும் முடி விலக்கி
ஒரு முத்தம் வைக்கும்
இன்னும் ஒன்றுக்கு
பத்து முறை
கூச்சப்படாது ‘மிஸ் யூ’
சொல்லிக் கொள்ளும்
ஒரே ஒரு தடவை ‘லவ் யூ’
சொல்லவும் வெட்கப்பட்டு
நிற்கும்
தொலைதூரக் காதலென்றாலும்
காதலல்லவா அது!
– பாத்திமா மிஸ்னா