ரஷ்யாவைக் கண்டித்த உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா அண்மையில் ரஷ்யாவுக்கு சுமார் 10,000 இராணுவ வீரர்களை அனுப்பவுள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த போரில் உக்ரேனுக்கு எதிராக வடகொரிய இராணுவத்தினரை ஈடுபடுத்தும் ரஷ்யாவின் தீர்மானத்திற்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையாகக் கூட்டு வைத்துக்கொண்டு ஆயுதங்களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளதாகவும் செலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவத்தினருக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாகவும் விரைவில் அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சீனா, உக்ரேனுக்கு எதிராக வடகொரிய ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button