குழந்தையை சாத்தானுக்கு பலி கொடுக்க முயன்ற தந்தை

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் அசாம். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் பின்னர் இவர் மாந்திரீகம், பூஜைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக மாறியுள்ளார்.

இந்நிலையில், இவரது மனைவி கர்ப்பந்தரித்த நாளிலிருந்தே தனது குழந்தையை சாத்தானுக்கு பலி கொடுக்க வேண்டும் என கூறி வந்துள்ளார்.

குழந்தை பிறந்ததும் மனைவியிடம் குழந்தையை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் எனவும் குழந்தையை தரும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

பயந்துபோன மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கும் சென்ற சதாம், மனைவியிடம் குழந்தையைக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பில் பெங்களூர் பொலிஸ் நிலையத்தில் சதாமின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனிப்படை அமைத்து விசாரிக்க பொலிஸ் ஆணையர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button