மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன்!
நாட்டு மக்களுக்கு சேவையாற்றவே தான் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பிலேயே திலகரட்ன டில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிலேயே எம்மால் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளகூடியதாக இருந்தது.
மக்கள் எம்மீது எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்பதை நாம் அன்று தெரிந்து கொண்டோம். பிரதான அரசியல் கட்சிகளினால் அடையமுடியாத சில இலக்கினை நாம் மிகக்குறுகிய காலத்திலேயே அடைந்துள்ளோம்.
நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன்.
நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு எனது பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.எனது பொறுப்பினை நான் உரியமுறையில் செயற்படுத்துவேன்” இவ்வாறு திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.