தேர்தல் களம்

மக்களுக்குச் சேவை செய்யாதவர்களே என்னைக் குறை கூறுகின்றனர்!

”மலையக மக்களுக்கு சேவை செய்யாதவர்களே தன்னைக் குறை கூறிவருகின்றனர்” என எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது மலையக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர்.

பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு உறுதி பூண்டுள்ளனர். இவ் விடயத்தில் எம் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

அந்தவகையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் எனக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள் முன்னணியின் 15 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இவ்வாறு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கொள்கை அரசியலுக்காகவே மலையக மக்கள் முன்னணி எனது தந்தை மற்றும் அவரின் தோழர்கள் மற்றும் ஆரம்பகால செயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.

பல தியாகங்களுக்க சவால்களுக்கு மத்தியில்தான் அக்கட்சி உருவாக்கப்பட்டது. அந்த கட்சி இன்று வியாபார நோக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது. கொள்கை அரசியலைவிடுத்து வியாபார அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்” இவ்வாறு அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.