கவிதைகள்

வீணையில் வழிந்தோடும் இசை மழை … கவிதைகள் … எஸ் யாழ் ராகவன்

கொட்டித் தீர்க்கும்
உற்சாகத்தில் எந்தத்துளி
நமக்கானது…

நொடிப்பொழுதில் வந்து செல்லும்
துடிப்பை பிடித்துவைக்க
ஏனோ இயலவில்லை…

இரவின் அமைதியை
வெளிச்சமிட்டு காட்டியதில்
ஊரே பயந்தது

ஒளிப்பதிவு கருவி ரெண்டு
உள்ளத்தைப்படமாக்கும்
தருணத்தில் சப்த அலை

ஊழி ஒன்றின் தாண்டவம்
அரங்கேற்றம் ஆகும்
சாமத்தில் யாவும்
ஆடி அடங்கும்

வான வீணையில்
வழிந்தோடும்
இசை மழை

எஸ் யாழ் ராகவன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *