தேர்தல் களம்

யாழ் வணிகர் கழகத்தினரை சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை நேற்றைய தினம்(17) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி,மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம், முன்னாள் போராளிகள், யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *