தேர்தல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியை கடுமையாக சாடிய தமிதா!

கட்சியின் பொதுச் செயலாளர் கூறுவது போல், தமது வேட்புமனு, தகவல் தொடர்பு பிரச்சினை காரணமாகவே நிராகரிக்கப்பட்டிருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கல்வியறிவற்ற மற்றும் காது கேளாதவர்களா? என நடிகை தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுத் தேர்தல் ஒன்றில் அவ்வாறு தகவல் தொடர்பு பிரச்சினையால் தான் ஐக்கிய மக்கள் சக்தியில் சமர்ப்பிக்கப்பட்ட தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசிய பட்டியலிலிருந்து விலகி, அதற்கு பதிலாக எனது பெயரை உள்ளிட வேண்டும்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் எழுதத் தெரியாத, பேசத் தெரியாத, காது கேளாத மனிதர்களா இருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். அப்படியானால் தான் தகவல் தொடர்பு சிக்கல்கள் இருக்க வேண்டும் இல்லையா? இவை நகைச்சுவைகள். இப்போது பொதுச் செயலாளர் இது ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை என்று கூறுகின்றார். அப்படியென்றால் தேசிய பட்டியலில் இருந்து நீங்கள் விலகி எனது பெயரை உள்ளிடுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *