சர்வதேச புகைப்பட விருதினை வென்ற இலங்கையர்!

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுகளில் “பாலூட்டிகளின் நடத்தை” பிரிவில் இலங்கை புகைப்படக் கலைஞர் ஒருவர் விருது வென்றுள்ளார்.

ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த லியனகே பிரசாந்த வினோத் என்ற நபரே சர்வதேச விருதினை வென்ற புகைப்படக் கலைஞர் ஆவார்.

வாழ்விட இழப்பு மற்றும் விவசாயிகளுடனான மோதல்களுக்கு மத்தியில் இலங்கையின் டோக் மக்காக் குரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைக்கும் அவர் எடுத்த புகைப்படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அவர் எடுத்த அந்த புகைப்படத்தில் குட்டிக் குரங்கொன்று, தனது தாயின் அரவணைப்பில் படத்துறங்குவது படம்பிடிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button