தேர்தல் களம்

வியாழேந்திரனுக்கு நேர்ந்த கதி; வேட்புமனு நிராகரிப்பு

ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தில் காணப்பட்ட தவறுகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு அரசியல் கட்சியினதும் 6 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *