24 வீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

புற்று நோயாளர்களுள் 24 வீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வருடாந்தம் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 5000 ஆக பதிவாகியுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் சமாலா மதுஷானி விக்கிரம தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின்படி, 2024 மார்பகப் புற்று நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்ட மாத்தளை மாவட்டத்தில் நிகழ்வுகள் தொடர்பில் காரணிகளை தெளிவுபடுத்திய வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் தொற்றா நோய் கட்டுப்பாட்டுக்காக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழு மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் தலைமையில் செயற்பட்டு வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *