நாயை கரடி போல் மாற்றிய சீன பூங்கா; குரைத்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்

சீனாவின் ஷான்வேய் நகரிலுள்ள உயிரியல் பூங்காவொன்றில் நாய்களுக்கு வர்ணம் பூசி கரடிபோல் மாற்றி காட்சிக்கு வைத்த விநோத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பார்வைக்கு விடப்பட்ட குறித்த நாய், நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு மூச்சிரைக்கும் காட்சியையும், திடீரென நாய் போல் குரைக்கத் தொடங்கியதும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அப்போதுதான் இது பாண்டா கரடி அல்ல. வர்ணம் பூசப்பட்ட நாய் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு வந்த பார்வையாளர்களில் சிலர் பூங்கா உரிமையாளர்களிடம் தாங்கள் கொடுத்த கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டு முறைப்பாடும் செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *