தீவிரமாகப் பரவி வரும் மர்ம நோய்!

இலங்கையில் பன்றிகள் இடையே ”Porcine Reproductive and Respiratory Syndrome” எனப்படும் வைரஸ் ஒன்று தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத்” கருத்துத் தெரிவிக்கையில் ‘யால, சிலாபம், பலப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த வைரஸானது இனங்காணப்பட்டுள்ளது எனவும், குறித்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான பன்றியின் இறைச்சியை உட்கொள்வதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,இப் பிரச்சினை பண்ணைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *