சிங்கப்பூரில் 182 வருடகால குதிரை பந்தயம் முடிவுக்கு வந்தது!

சிங்கப்பூரில் 182 வருடங்களாகக் குதிரைப் பந்தயப் போட்டிகள் நடைபெற்றுவந்த மைதானத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிங்கப்பூரில் காணப்படும் இட நெருக்கடியைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மைதானத்தில் மக்கள் வசிப்பதற்கான வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மைதானத்தில் இறுதியாக நடைபெற்றுள்ள கிராண்ட் சிங்கப்பூர் கோல்ட் கோப்பைக்கான போட்டியினையடுத்து சுமார் 182 ஆண்டு கால குதிரைப் பந்தயம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *