மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் கோயில் முற்றாக தீக்கிரை !

மட்டக்களப்பு கல்லடி – உப்போடை பேச்சி அம்மன் ஆலயம்  வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள  சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில்  வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

தீ பெரும் சுவாலையாக  பிரகாசமாக எரியத் தொடங்கியதைaடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் கோயில் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியது

பேச்சி அம்மனின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில், தீ பற்றியதை  கேள்வியுற்ற அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து கோயிலை சூழ்ந்து கொண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கோயில் மூலஸ்தானம் தீபற்றியதை கண்டுற்ற பல பக்தர்கள் கத்தி கதறி அழுது புலம்பியும் பெரும் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button