சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது

சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர்.

40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இலங்கை இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button