17 கிலோவாக அதிகரித்த உடல் எடை; டயட்டில் இருக்கும் பூனை

பொதுவாக மனிதர்கள்தான் உடல் எடை அதிகரித்து அதனைக் குறைப்பதற்காக அவதிப்படுவார்கள்.

ஆனால் ரஷ்யாவில் க்ரோஷின் என்கின்ற பூனையொன்று 17 கிலோ எடையினால் பெரும் அவதிப்பட்டு வருகிறது.

அதனால் தற்போது இந்தப் பூனை டயட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் பூனை ரஷ்யாவிலுள்ள பெர்மில் என்கின்ற மருத்துவமனையில் மெட்ரோஸ்கின் என்ற தங்குமிடத்தில் மறுவாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பூனையின் உரிமையாளர் அதற்கு ரொட்டி, சூப், விஸ்கி, இறைச்சி என அனைத்தையும் உண்ணக் கொடுத்துள்ளார். மிகவும் நன்றாக கவனித்துள்ளார்.

ஆனால், பூனைக்கு எதுவித ஸ்கேன்களும் எடுக்க முடியவில்லை. காரணம் சென்சார் கொழுப்பு அடுக்குகளைக் கடக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பூனையின் எடை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button