பலதும் பத்தும்

ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள் – உயிரிழந்த நபர்: சீனாவில் சம்பவம்

சீனா, ஜெய்ஜியாங் பிராந்தியம், ஜின்ஹூவா நகரிலுள்ள பல் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி ஹூவாங் என்பவருக்கு மாற்று பற்கள் பொருத்தும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அவரது 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதேநாளில் 12 புதிய பற்கள் உடனடியாக Immediate restoration முறை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய அவர், இரண்டு வாரங்களின் பின்னர் ஒகஸ்ட் 28ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஹூவாங்கின் மரணம் தொடர்பில் அவரது மகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட, இவ்விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது அறுவை சிகிச்சை அல்ல குறித்த நபரை வைத்து ஏதோ பரிசோதனை செய்துள்ளனர் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை ஒரு நாளைக்கு 10 பற்கள் பிடுங்குவதே அதிகம் என பல் சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.