அரியநேத்திரனின் பிரச்சாரத்தில் இடையூறு விளைவித்த பொலிஸார்: பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் ‘நமக்காக நாம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.

இப் பிரச்சாரத்தின்போது பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

தனது பிரச்சாரத்தை பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து பூஜையுடன் ஆரம்பித்தார்.

பின்னர் மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும்போது அங்கு வருகை தந்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டன.

பின்னர் கல்முனை ஆர்.கே.எம் சந்தி கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமான கண்காணிப்பிற்கும் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button