கனவு சாஸ்திரம் கூறுவது என்ன?
அனைவருக்குமே கனவுகள் வரும். ஆனால், அக் கனவுகளுக்கான அர்த்தம் என்னவென்று பல பேருக்குத் தெரியாது.
அந்த வகையில் நாம் காணும் கனவுகளுக்கு என்ன அர்த்தம் எனப் பார்ப்போம்.
முனிவர்கள் அல்லது துறவிகள் கனவில் வந்தால், நீங்கள் பொது வாழ்க்கைக்குள் நுழையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
விவசாயி நிலத்தை உழுவது போல் கனவு வந்தால் சேமிப்பு அதிகரிக்கும்.
வழுக்கை தலையுடனான ஒரு நபரைக் கனவு கண்டால் கையில் காசு தங்காமல் கடன் வாங்குவீர்கள்.
மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால், எதிர்வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
மனிதனை வெட்டுவது பற்றிய கனவு வந்தால், நெருக்கமான ஒருவரை இழக்க நேரலாம்.
குலதெய்வ கோயிலுக்குச் செல்வதைப் போல் கனவு கண்டால், நினைத்த காரியம் நடக்கும்.
முருங்கை மரத்தை கனவு கண்டால் வாழ்க்கையில் சுபீட்சம் பிறக்கும்.
தர்மம் செய்வதைப் போல் கனவு கண்டால் லக்ஷ்மி கடாட்சம் என அர்த்தம்.
நீங்கள் இறந்து விட்டதுபோல் உங்களுக்கு கனவு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
பிணத்தை தூக்கிச் செல்வதைப் போல் கனவு கண்டால் நன்மை.