விகாரைகளுக்காக கபளீகரம் செய்யப்படும் தமிழர் நில பரப்பு: மண்மீட்பிற்காக அனைவரும் அணிதிரள வேண்டும்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் கையகப்படுத்தி உள்ளதாகவும், துறைமுக அதிகார சபையும் காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுவதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வு மூதூர்-பட்டித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உரிமைப் பிரச்சினை, அபிவிருத்தி பிரச்சினை இதில் உரிமை தான் முக்கியம் பாராளுநாடாளுமன்ற உறுப்பினராகி 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் இம்மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை செய்துள்ளேன்.

யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளேன்

அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே முக்கியமாக காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறைமுக அதிகார சபை என மொத்தமாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர்.

எல்லைநிர்ணய ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளது. குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button