தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்: கண்காணிப்பில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்கள் அவதானம் செலுத்தி இருந்தார்கள்.

அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளராலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர்கள் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button