பலதும் பத்தும்

மகளுடன் சென்று பணியைக் கவனிக்கும் உணவு விநியோக ஊழியர்

டெல்லியைச் சேர்ந்த சோனு என்ற ஆடவர், ‘ஸோமாட்டோ’ என்ற உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மனைவியைப் பிரிந்து வாழும் அவர், நாள்தோறும் தனது இரண்டு வயது மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்று பணியைக் கவனிக்கிறார்.

இந்நிலையில், சோனுவுக்கு பிரபல ஸ்டார் பக்ஸ் நிறுவன மேலாளர் தேவேந்திர மெஹ்ராவின் பாராட்டு கிடைத்துள்ளது.

அவரது அண்மைய சமூக வலைத்தளப் பதிவில், புதுடெல்லி கான் சந்தைப் பகுதியில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடைக்கு சோனு தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்ததாகவும், தீர விசாரித்த போதுதான் சோனு தனித்து வாழ்வது குறித்து தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.

“ஒரு கையில் குழந்தை, மறு கையில் வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய உணவுப்பொட்டலம் என மகளின் எதிர்கால வாழ்கைக்காக போராடும் சோனுவின் போராட்டம் மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

“அப்பாவும் மகளும் நலமாக வாழ எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள்,” என்று தேவேந்திர மெஹ்ரா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்குப் பதில் அளித்துள்ள ஸோமாட்டோ நிர்வாகம்,

சோனுவைப் பற்றி இதயம் தொடும் கதையைப் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகும், அவர் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு, மன வலிமை ஆகியவற்றால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.