ஹொட்ஸ்பொட் பகிர மறுத்த நபர்; குத்திக் கொலை செய்த இளைஞர்கள்

இந்தியா, மராட்டிய மாநிலம், புனேவில் ஹதப்சர் பகுதியில், குல்கர்னி எனும் நபரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வழியே சென்று கொண்டிருந்த சில இளைஞர்கள் தொலைபேசியின் ஹொட்ஸ்பொட்டை (Hotspot) பகிருமாறு கேட்டுள்ளனர்.

அறிமுகமில்லாதவர்களுக்கு ஹொட்ஸ்பொட்டை பகிர குல்கர்னி மறுத்துள்ளார்.

இதனால் குல்கர்னி மற்றும் அந்த இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல் தீவிரமாக அந்த இளைஞர்கள் குல்கர்னியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஒரு வாலிபரையும் சிறுவர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *