ஜனாதிபதியானால்: முதல் 100 நாட்களில் முன்னுரிமை அளிக்கப்படும் 05 செயற்பாடுகள்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் 100 நாட்களில் முன்னுரிமை அளிக்கப்படும் 05 செயற்பாடுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதிகாரத்தை ஸ்தாபித்தல், நாடாளுமன்றத்தை கலைத்தல் மற்றும் மக்கள் கருத்துக்கு ஏற்ற நாடாளுமன்றம் அமைப்பது, சட்டத்தின் ஆட்சி மற்றும் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஒன்றரை வருடங்களில் புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் பிபிசி சிங்களசேவையுடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், ஜனாதிபதி பதவி நீக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு திருத்தம், ஈஸ்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, முதல் 100 நாட்களில் முன்னுரிமை, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் அங்கு பகிரப்பட்டுள்ளன.