செப்டெம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: அனுர வகுத்துள்ள திட்டம்
ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டெம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இந்த திருடர்களுடன் ஒரு நாள் கூட ஈடுபடுவதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை.
புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது.
22ஆம் திகதி அனுரகுமார திஸாநாயக்க எமது நாட்டிற்கு சிறந்த தீர்மானத்தை எடுப்பார், அதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம்எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கீழ், அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக பதவி நீக்கப்படுவார்கள், அதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.